ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் அதிரடிப் படங்களில் நடித்து அசாத்தியமான சண்டைக் காட்சிகளின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர். அதன்மூலம் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
தனது 8 வயது முதல் நடிக்கத் தொடங்கிய அவர் எழுத்தாளராகவும், இயக்குநராகவும் பல திரைப்படங்களை ஹாங்காங்கில் எடுத்துள்ளார். இந்தியாவிலும் குறிப்பாக, தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இதற்கிடையே, ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்த அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு நடைமுறைப்படுத்தியது. இதை எதிர்த்து ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நடிகர் ஜாக்கி சான் கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தார். இதனால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
சீன திரைப்பட சங்கத்தின் துணைத்தலைவராக பதவி வகித்து வரும் ஜாக்கி சான், பீஜிங்கில் நேற்று நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த சில ஆண்டுகளில் சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது. இதை பல நாடுகளுக்குச் செல்லும்போது நேரடியாக நான் உணர்ந்துள்ளேன். சீன குடிமகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன். ஐந்து நட்சத்திரங்களை உடைய நமது சிவப்புக் கொடிக்கு உலகம் முழுதும் மரியாதை கிடைக்கிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை மிக குறைந்த காலத்திலேயே நிறைவேற்றி வருகிறது. எனவே, அக்கட்சியில் உறுப்பினராக சேர ஆர்வமாக உள்ளேன் என்றார்.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரைய
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
உக்ரைனிய நகரங்கள் மீது 120க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி எ
மேற்கு லண்டனில் தாயார் ஒருவர் தமது 5 வயது மகளை கழுத்தை
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ம் தே
ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்
அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, சீனாவு
தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தாக்குதல் ஒரு மாத
நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவி
