கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (84). இவர், பெருங்குடல் பிரச்சினை காரணமாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 4ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது.
அதன் பிறகு, அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் காய்ச்சல் குறைந்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவர் மருத்துவனையிலேயே தினமும் பிரார்த்தனை மற்றும் ஞாயிறு வழிபாட்டை நடத்தினார்.
இந்நிலையில் அறுவை சிகிச்சை நடந்த 10 நாட்களுக்கு பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று வாடிகன் திரும்பினார். கெமல்லி மருத்துவமனையில் இருந்து தனது சொகுசு காரில் புறப்பட்ட போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகன் செல்வதற்கு முன்பாக ரோம் நகரில் உள்ள சாண்டா மரியா பேராலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
பொதுவாக அவர் வெளிநாடு பயணங்களை முடித்துவிட்டு ஊர் திரும்பும் போது இந்த பேராலயத்தில் வழிபாடு நடத்துவது வழக்கம். போப் ஆண்டவர் பிரான்சிஸ், வரும் செப்டம்பர் 12 முதல் 15 வரை ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்கு
பிரித்தானியா ராஜ்ஜியத்தின் அரசியாக கிட்டத்தட்ட 70 ஆண்
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந
மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக பாக
பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மாநில முதல் மந்தி
நைஜீரியா நாட்டின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில்
உக்ரேனிய தேசிய பாதுகாப்பு சேவையின் மூத்த உறுப்பினர்க
உக்ரைன் அருகே உள்ள ரஷ்ய இராணுவத்தின் பெல்கொரோட் பயிற்
உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் உலக குத்துசண்டை வீ
உக்ரைன்-ரஷ்யாவிடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நட
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தட
அழகுக்காக செய்யப்படும் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சையில
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை நடத்த வேண்டு
