வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஹராரேயில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வெஸ்லி மாதேவிர் 73 ரன்கள் எடுத்தார். ரியான் பர்ல் அதிரடியாக ஆடி 19 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
வங்காளதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. ஆனால் ஜிம்பாப்வே அணியினர் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், வங்காளதேசம் 19.5 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஆபிப் உசைன் 24 ரன்கள் எடுத்தார்.
இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
ஜிம்பாப்வே சார்பில் லூக் ஜோங்வே, மசாகட்சா தலா 3 விக்கெட்டும், சதாரா, முசாராபானி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது வெஸ்லி மாதேவிருக்கு அளிக்கப்பட்டது.
இந்திய அணியில் சுற்றும் பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அ
ஈரானிய கால்பந்தாட்ட அணியினர் கனடாவிற்கு சுற்றுப் பயண
பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், ம
கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்க
ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,
உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட
நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடை
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ
சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம
மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழ
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 3 போ
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், ராஜஸ்தான்
