ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஹஜ் பெருநாள், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளாகும்.
இஸ்லாமிய சமூகம், தமது கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான காலகட்டமாகவும் இதனை நான் பார்க்கிறேன்.
அனைத்து சமயத் தலைவர்களும் மனித சமூகத்தின் நல்வாழ்வுக்குத் தேவையான உலகப் பொதுவான நன்நெறிகளை எமக்குத் தந்துள்ளனர்.
சமூக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும், அவற்றின் பங்களிப்பு மகத்தானதாகும். இது, உலகின் தொடர்ச்சியான நல் இருப்புக்கு இன்றியமையாத காரணியாகும்.
இஸ்லாத்தின் இறுதித் தூதராகக் கருதப்படும் முஹம்மத் நபியவர்களின் வாழ்வியலைப் பின்பற்றும் அனைத்து இஸ்லாமியர்களும் எதிர்பார்க்கும் ஈருலக வெற்றியையும் இறை நெருக்கத்தையும் அடைய, இந்த ஹஜ் பண்டிகைக் காலம் உதவும்.
கொவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக, முன்னரைப் போலவே பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் பிரகாரம் செயற்படுவதற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது, அனைவரதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை நோக்காகக் கொண்டதாகும். இந்த விடயங்களில் விசேட கவனம் செலுத்தி, இந்தப் பண்டிகைக் காலத்தில் சமயக் கிரியைகளில் ஈடுபடுமாறு நினைவூட்ட விரும்புகிறேன்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட
அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்
இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பத
சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரக
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிப்பதில் கொரிய ச
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையங்கள
கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட
அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை மேலும
நாட்டில் நாளை முதல் 21ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படு
கொழும்பு − கிரான்ட்பாஸ் − கஜீமா தோட்டத்தில் நேற்று
இலங்கை மின்சார துறையின் தொழிற்நுட்ப பிரிவுகளில் பல ஆண
அரசமைப்பு பேரவையூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின
இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப
கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில் புத
