More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மருத்துவ படிப்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு -
மருத்துவ படிப்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு -
Jul 26
மருத்துவ படிப்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு -

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மாநில அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசுப் பள்ளி மாணவர்களைப் போல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்விச் சங்கமும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வின் முன்பு நிலுவையில் உள்ளது.



இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்திருந்த மக்கள்நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன்,”அரசுப் பள்ளி மாணவர்களும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேர ஏதுவாக அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 10 சதவீதத்திற்கும் குறையாமல் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது.



அதன் அடிப்படையிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.



அப்போது, அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் விரிவாக வாதிட கால அவகாசம் வேண்டும் என்பது மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்க்கொண்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆறு வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது

Jun30
Mar12

இரண்டு வருட நீண்ட  இடைவெளிக்கு இந்திய பிரதமர் நரேந்த

Jul02

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுக

Oct10

லகிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர

Mar14

மராட்டியத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு தொடர

Oct09

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி கார

Jul08

மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்க

Jul27

ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் முதல் முதலாக இந்தியா

Feb03

இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப

Jul15

புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து உள்நாட்

Apr06

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில

Mar02

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர

Jun25
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (20:59 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (20:59 pm )
Testing centres