More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 43 சட்டங்களுக்கு ஒப்புதல் 4 ஆண்டுகள் நிறைவு செய்தார் ஜனாதிபதி!
43 சட்டங்களுக்கு ஒப்புதல் 4 ஆண்டுகள் நிறைவு செய்தார் ஜனாதிபதி!
Jul 26
43 சட்டங்களுக்கு ஒப்புதல் 4 ஆண்டுகள் நிறைவு செய்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை இ.புத்தகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: தற்போது 76 வயதான ராம்நாத் கோவிந்த், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி நாட்டின் 14வது ஜனாதிபதியாக பதவியேற்றார். தனது பதவியில் இன்றுடன் அவர் 4 ஆண்டுகளை நிறைவு செய்தார். இந்த 4 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் 43 சட்டங்களுக்கு  ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 23 சட்டங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளார். முக்கிய பிரச்னைகள் குறித்து 23 வெளிநாட்டு தலைவர்களுடன் காணொலி வழியே விவாதித்திருக்கிறார்.   



தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். கர்நாடகாவில் ஜெனரல் திம்மய்யா அருங்காட்சியகத்தை திறந்து வைத்துள்ளார். அந்தமான் நிகோபாருக்கும் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையை நாட்டு மக்கள் அணுகும் வகையில் வகையில் எளிமையாக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி-மார்ச் மாதத்தில் மட்டும் 34,293 பேர் மொகல் தோட்டத்தை பார்வையிட்டுள்ளனர். 4,817 பேர் ஜனாதிபதி மாளிகையையும், 7,458 பேர் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



* ஜம்மு காஷ்மீர் சென்றார்

கார்கில் வெற்றியின் 22ம் ஆண்டு  தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த போரில் உயர் தியாகம் செய்த வீரர்களுக்கு இன்று லடாக்கின் டிராஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள கார்கில் வீரர்கள் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்துகிறார். இதற்காக, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்று சேர்ந்தார். நாளை ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan03

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்தà

Feb07

உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பகà

Jul21

இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்à®

Oct17

நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின் 270 கோடி ரூபாய் à

Mar12

உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்திà

Feb24

மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில் மகனை தந்தையே காடà

Mar20

அந்தமான் கடற்பகுதியில் நாளை ‛அசானி'புயல் உருவாகிறது

May22

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளà®

Sep19

இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதà

May22

இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து புதிய கடன்களை பெற்ற

Oct05

புதுடெல்லி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பà

Feb23

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கங்கேசானந்à

Feb25

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தà®

Aug15

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிற

Aug17

கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை மந்திரியான வீணா ஜார்ஜ

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 03 (00:39 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 03 (00:39 am )
Testing centres