மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்கு நூற்றுக்கணக்கான கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஷிவ்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டுவந்தனர்.
மேலும், அங்குள்ள பல்வேறு கிராமங்களுக்கு மீட்புப் படையினர் சென்று அங்குள்ள மக்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானிடம், பிரதமர் மோடி காணொலி மூலம் கேட்டறிந்தார். அப்போது பேசிய சிவராஜ் சிங் சவுகான், இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதமரிடம் அவர் கூறினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்க
இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும்
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்ற
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவத
சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு விசேட ஏற்பாட
பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த
