இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டி வரும்.
என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கையில் நாளாந்தக் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் நேற்றுமுன்தினம் 1,900 ஐத் தாண்டியுள்ளது.
இதேவேளை, நேற்று 2,300 இற்கும் மேற்பட்ட கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் புத்தாண்டுக் கொரோனாக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.
சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தமையால் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.
எனவே, மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டி வரும்.
கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொதுமக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும் – என்றார்.
அரச இரகசியச் சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களா
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத
பசில் ராஜபக்சவின் ஓய்வு வாழ்க்கை அமெரிக்காவிலேயே உள்
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின்
நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வ
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக
வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்த
நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசிய
மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்ப
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெ
பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக
கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமா
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு ம
