கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அங்கு அமிதாப் பச்சன், சித்தார்த் மல்ஹோத்ரா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில், அதிக பாலோவர்களை கொண்ட தென்னிந்திய நடிகையாக உயர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 20 மில்லியனை (2 கோடி) தாண்டியுள்ளது. இதன்மூலம் காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் பிரீத் சிங், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளியுள்ளார் ராஷ்மிகா.
இவருக்கு அடுத்ததாக, நடிகை காஜல் அகர்வாலை 1.92 கோடி ரசிகர்களும், சமந்தாவை 1.8 கோடி ரசிகர்களும், ரகுல் பிரீத் சிங்கை 1.73 கோடி ரசிகர்களும், ஸ்ருதிஹாசனை 1.72 கோடி ரசிகர்களும் பின் தொடர்கின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுன் 3ம் தேதி விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடி
இசைஞானி இளையராஜா தற்போது துபாயில் நடந்துவரும் எக்ஸ்ப
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இ
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான
நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்த சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் கடைப்ப கே.ஜி.எப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ பட சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து 2016-ல் வெளியான படம் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து அதன் ர பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு ப பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் சிம்பு தொகுத்து வழங்க ஆரம அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வலிமை’.
