ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு வந்த அமெரிக்க ராணுவம் அங்கிருந்து சமீபத்தில் வெளியேறி வருகிறது.
ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து நிலைமை அங்கு மிக மோசமாக மாறிவருகிறது. கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். ஆப்கன் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயன்று வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரண்டு மாகாணங்களின் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றினர். தலைநகர் காபுல் போன்ற முக்கிய நகரங்களையும் தலிபான்கள் நெருங்கிவருகிறார்கள்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான காந்தகாரை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக தலிபான்கள் செய்தித் தொடர்பாளரின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பக்கத்தில், காந்தகார் முற்றிலுமாக கைப்பற்றப்பட்டது. நகரத்தில் உள்ள தியாகிகள் சதுக்கத்தை முஜாகிதீன்கள் அடைந்துள்ளனர் என தெரிவித்திருந்தார்.
அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏ
பிலிப்பைன்ஸில் 92 ராணுவ வீரர்களை அழைத்துச் சென்ற ராணுவ
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்க
உக்ரைனிய நகரங்கள் மீது 120க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள
ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் ம
அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உ
பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரா
ஏவுகணை சோதனை பாகிஸ்தான் நேற்று கண்டம் விட்டு கண்டம் ப
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொ
துபாயில் வசித்து வருபவர் மனோஜ் சாமுவேல். இவரது மனைவி ச
பிரான்சில் நேற்று 29,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ச
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ம் தே
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.
அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அமெர
