ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலீபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துக்கொண்டு ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகின. அதே சமயம் அவர் கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றதாக மற்றொரு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
ஆனால் கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அஷ்ரப் கனி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
இதற்கிடையில் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் ஆப்கானிஸ்தானின் பிற தலைவர்கள் உஸ்பெகிஸ்தான் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் உஸ்பெகிஸ்தான் நாடும் அஷ்ரப் கனி தங்கள் நாட்டில் இல்லை என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் அஷ்ரப் கனி தற்போது ஓமன் நாட்டில் இருப்பதாகவும் அவர் அமெரிக்காவில் குடியேற முடிவு செய்திருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்
தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்
இரண்டு நாட்களாக ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனுக்க
உலக அளவில்
உக்ரேனுக்குள் ரஷ்யா நுழைந்ததை அடுத்து நட்புறவு நாடுக உலக அளவில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ ஹெலிகோப்டேரை அந்த நா கனடாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று கொவிட்–19 நோயை உண்டாக்கும் கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத் ரஷ்யா உக்ரைன் மக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்டவில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசர கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்ப இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் (கொவிட்-19) மாறுபாடு தொற்றை க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆ
