சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் வாழ்நாள் கனவாக உள்ளது. நமது நாட்டில் சொந்த வீடு வாங்கவேண்டும் என்றால் பல லட்சங்கள் தேவைப்படும்.
ஆனால் இத்தாலியில் வெறும் ரூ.87 க்கு ஒரு வீடு வாங்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அது உண்மைதான். இத்தாலியின் தலைநகர் ரோமில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மென்சா என்கிற நகரில் தான் ஒரு யூரோவுக்கு ( இந்திய மதிப்பில் ரூ.87 ) வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது.
1968-ம் ஆண்டு பெலிஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பின் மக்கள் மென்சோ நகரில் இருந்து வெளியேற தொடங்கினர். இதனால் மென்சோ நகரத்தின் மக்கள் தொகை கணிசமாக குறைந்தது. இதையடுத்து முன்பு போலவே இந்த நகரில் மீண்டும் மக்கள் அதிக அளவில் குடியேற வேண்டும் என்ற முயற்சியில், அரசால் குறைந்த விலையில் வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து அந்நகரின் மேயர் கிளாடியோ ஸ்பெர்டி கூறுகையில் ‘‘வீடுகளின் விற்பனைக்கான விண்ணப்பங்கள் 28-ந் தேதியுடன் முடிவடையும். தற்போது ஒரு சில வீடுகள் மட்டுமே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அதிக வீடுகள் விரைவில் கிடைக்கும். நகரில் இருக்கும் கைவிடப்பட்ட அல்லது காலியான டஜன் கணக்கான வீடுகள் எதிர்காலத்தில் விற்பனைக்கு வைக்கப்படும்’’ என கூறினார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக
அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன
இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவ
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
புதின் தனது நீண்ட காலத் தோழியான அலினா கபாவே என்ற பெண
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆ
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ
தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது ஹுயல
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை விடுதலை செ
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா
உக்ரைன் மீதான ரஷ்யாவின் மிலேச்சத்தனமான தாக்குதலின
உக்ரைன் அகதிகள் குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்ம
உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால், அங்கிருந்து
