இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. உண்மைத் தகவல்களையே ஊடகங்களுக்கு வழங்குகின்றோம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
நாளாந்தக் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை அரசு குறைத்து வருகின்றது என எதிரணியினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நாளொன்றில் முதல் தடவையாக நேற்றுமுன்தினம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளது. நேற்றுமுன்தினம் 108 ஆண்கள், 101 பெண்கள் உள்ளிட்ட 209 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்துள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டுக்கு நல்லதல்ல. இது நாட்டின் ஆபத்து நிலைமையை எடுத்துக்காட்டுகின்றது. எனவே, தனிமைப்படுத்தல் சட்டத்துக்கமைய இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் மக்கள் தமது அத்தியாவசிய நாளாந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்” – என்றார்.
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு
LGBTQ (lesbian, gay, bisexual, transgender, and questioning ) சமூகத்திற்கு எதிராக பயன்படு
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வ
வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினே
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்ட
யாழ்ப்பாணம்இ நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமார
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட
எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளா
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர
2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட் சையி
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமு
