More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • புதிய ஆட்சி அமைக்க தலிபான்கள் தீவிரம்- விரைவில் அறிவிப்பு வெளியாகிறது!
புதிய ஆட்சி அமைக்க தலிபான்கள் தீவிரம்- விரைவில் அறிவிப்பு வெளியாகிறது!
Aug 23
புதிய ஆட்சி அமைக்க தலிபான்கள் தீவிரம்- விரைவில் அறிவிப்பு வெளியாகிறது!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதால் அந்த நாட்டை 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர்.



என்றாலும் ஆப்கானிஸ்தானில் சில மாகாணங்களில் தலிபான்களுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. தலிபான்களுக்கும், மாகாண குழுக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.



இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக தலிபான் குழுக்களிடையே தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.



தலிபான்களில் மூத்த தலைவர்களாக இருக்கும் 7 பேரில் ஒருவரை அதிபராக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தலிபான் தலைவர்கள் தற்போது காபூலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்த பிறகு புதிய ஆட்சி தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.



இதுகுறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் முஜாகித் கூறுகையில், “ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்” என்று கூறினார்.



ஆப்கானிஸ்தானில் பஞ்ச்சீர் பள்ளத்தாக்கில் உள்ள குழுக்களுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள். அதில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதும் புதிய ஆட்சி தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவு, உடைகள் மற்றும் தினசரி தேவை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது.



பர்தாக்களின் விலை 17 மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது. தலிபான்களின் எச்சரிக்கை காரணமாக பர்தா உடைகளுக்கு தேவை அதிகரித்து உள்ளது.



வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய தலிபான்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு தோழமையாக இருக்கும் நாடுகள் கூட விமான சேவையை ரத்து செய்து உள்ளன.



ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் தற்காலிகமாக அனைத்து விமான சேவைகளையும் துண்டித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul18

இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற

Mar29

வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உ

Apr11

பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரா

Mar03

கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான அமெரிக்

Aug14

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் க

Jul05

துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நக

Feb14

இந்தோனேசியாவில் இராட்சத அலையில் சிக்கிய 11 பேர் உயிரிழ

Mar18

வேறு தொகுதியில் போட்டியிட வைத்தால் அதிமுக மேற்கு மாநி

Mar07

உக்ரைன் அரசு சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் என ர

Oct13

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடைய

Oct24

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந

Mar09

உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழ

Jan31


சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்த

Jul22

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி க

Sep12

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (04:33 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (04:33 am )
Testing centres